தியாகராஜ சுவாமிகள்

1767 – 1847

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். ராம பக்தர். ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றி கர்நாடக சங்கீதத்திற்கு பெரும் பங்காற்றியவர்.

வாழ்க்கை குறிப்பு
தியாகராஜர் 1767 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்தார். பிற்காலத்தில் திருவையாற்றில் வாழ்ந்தார். ராமபிரான் மீது அதீத பக்தி கொண்டவர். ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவருடைய "பஞ்சரத்ன கீர்த்தனைகள்" உலகப்புகழ் பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் திருவையாற்றில் "தியாகராஜ ஆராதணை" விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவருடைய பாடல்கள் அனைத்தும் தெலுங்கு மொழியில் அமைந்தவை. சங்கீதத்தை மோட்சம் அடைவதற்கான வழியாக இவர் கருதினார். அரச பதவிகளையும் செல்வத்தையும் மறுத்து, ராம பக்தியிலேயே தனது வாழ்நாளைக் கழித்தார். இவருடைய பாடல்களில் "தியாகராஜ" என்ற முத்திரையை உபயோகித்துள்ளார். 1847 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முக்தி அடைந்தார்.
பிரபலமான பாடல்கள்

ஜகதானந்த காரக

நாட்ட ராகத்தில் அமைந்த முதல் பஞ்சரத்ன கீர்த்தனை.

எந்தரோ மகானுபாவுலு

ஸ்ரீ ராகத்தில் அமைந்த ஐந்தாவது பஞ்சரத்ன கீர்த்தனை.