வாழ்க்கை குறிப்பு
இவர் 1762 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்தார். வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பது இவருடைய இயற்பெயராகும்.
தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்.
தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோவிலின் சன்னிதியில் தினமும் அமர்ந்து மனமுருக பாடுவார். மதுரை மீனாட்சி
அம்மன் பெயரில் "நவரத்தின மாளிகை" என்ற ஒன்பது கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். சுமார் 300 கிருத்திகளை
இயற்றியுள்ளார்.
ஆனந்த பைரவி இவருடைய குடும்ப சொத்து என்பார்கள். மிஸ்ர சாப்பு தாளத்தில் பல கிருத்திகளை இயற்றியுள்ளார்.
இவருடைய தாள ஞானம் மிகவும் அற்புதமானது.
இவரை சின்ன வயதில் செல்லமாக "சியாமகிருஷ்ணா" என்று அழைப்பார்கள். இந்தப் பெயரையே தனது கிருதிகளில்
முத்திரையாக வைத்துக் கொண்டார்.
இவருடைய மூன்று சுவரஜதிகள் (தோடி, பைரவி, எதுகுள காம்போதி) மிகவும் பிரசித்தமானவை. இவை சங்கீத உலகின் மூன்று
ரத்தினங்களாகக் கருதப்படுகின்றன. 1827 இல் தனது 65 வது வயதில் அம்பாள் அடி சேர்ந்தார்.