புரந்தரதாசர்

1484 - 1564

கர்நாடக சங்கீதத்தில் "பிதாமகர்" (தாத்தா) என்று போற்றப்படுபவர். ஒரு பெரும் செல்வந்தராக இருந்து பிறகு அனைத்தும் இறைவனது என்று உணர்ந்து ஞானம் பெற்றவர்.

வாழ்க்கை குறிப்பு
1484 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் சீனிவாசன். தந்தையார் நடத்தி வந்த ரத்ன வியாபாரத்தை எடுத்து நடத்தி ஏராளமான செல்வத்தை ஈட்டினார். இதனால் இவரை "நவக்கோட்டி நாராயணன்" என்றும் அழைப்பார்கள். ஒருநாள் ஒரு அந்தணர் வந்து உதவி கேட்க, தனது ரத்ன வியாபார புத்தியால் அவரைத் திருப்பி அனுப்பினார். ஆனால் பாண்டுரங்கனின் திருவிளையாடலால் தனது மனைவியின் மூக்குத்தி மூலம் ஒரு அற்புதம் நடந்து, இவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது. ஞானம் பெற்றவுடன் தனது செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு பாண்டுரங்கனைத் துதிக்கத் தொடங்கினார். வியாசராய சுவாமிகளிடம் உபதேசம் பெற்று "புரந்தரதாசர்" என்று அழைக்கப்பட்டார். இவருடைய கீர்த்தனங்கள் "தேவர்நாமா" என்று அழைக்கப்படுகின்றன. சங்கீதத்தை எளிதில் கற்பிக்க ஏதுவாக மாயாமாலவகௌள ராகத்தில் ஸ்வராவளி, ஜண்டை வரிசை, அலங்காரங்கள் மற்றும் கீதங்களை இயற்றினார். இதனால் இவரை "சங்கீத பிதாமகன்" என்று அழைக்கிறார்கள். இவர் சுமார் 4,75,000 பாடல்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. தியாகராஜ சுவாமிகள் இவரை "நாரதரின் அம்சம்" என்று போற்றுகிறார். இறுதி காலத்தில் சன்னியாசம் பெற்று 1564 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
பிரபலமான பாடல்கள்

தாஸ் தாசரென்பரு

இறைவன் மீது இவர் பாடிய உன்னதமான பாடல்.

வெங்கடாசல நிலயம்

திருப்பதி வெங்கடாசலபதியின் மீதான மிகப்பிரபலமான பாடல்.