ஊத்துக்காடு வெங்கடகவி

18-ஆம் நூற்றாண்டு

இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார். ஊத்துக்காடு கோவிலில் குடி கொண்டிருக்கும் காலிங்கநர்த்தனனை மானசீக குருவாக ஏற்றவர்.

வாழ்க்கை குறிப்பு
இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார். ஈடாமங்கலத்துக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் ஊத்துக்காடு என்னும் ஊரில் வளர்ந்தார்... இராமச்சந்திர வாகுலர் என்பவருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். நீடாமங்கலம் நடேசரத்தினபாகவதரிடம் இசை பயின்றார்.... கிருஷ்ணயோகி என்பவரிடம் மேலதிக பயிற்சி பெற சென்றபோது அவர் கற்றுத்தர மறுக்கவே, தன் தாயின் அறிவுரைப்படி ஊத்துக்காடு கோவிலில் குடி கொண்டிருக்கும் காலிங்கநர்த்தனனை மானசீக குருவாக ஏற்று பயிற்சி செய்தார்... ஒருநாள் அவர் காதில் அசரீரி ஒலித்து கிருஷ்ணரே அவருக்கு ஞானம் அளித்ததாக கூறப்படுகிறது... இதனால் இந்த கண்ணனின் அருளால் தெய்வமயமான பல சாகித்தியங்களை நமக்கு தந்திருக்கிறார்... இவருடைய பாடல்கள் அனைத்திலும் மதிமகிரசாகித்யம் இருக்கும்... ஏனென்றால் இவர் அந்த கண்ணனை பாடும்போது கண்ணன் எதிரில் நந்தனம் செய்வதை போல பாவித்தே பாடி இருக்கிறார்... இவர் பாடிய "காலிங்க நர்த்தனம்" பாடல் மிகவும் அற்புதமானது. கண்ணன் காலிங்க நர்த்தனம் ஆடுவதை நேரில் கண்டு பாடியதாக வரலாறு கூறுகிறது... இவருடைய பெரும்பாலான கிருதிகளில் மத்தியமாகா சாகித்தியம் நடனம் ஆடுவது போலவே இருக்கும் ஆகையால் இவருடைய பாடல்கள் நிறைய நடன நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.
பிரபலமான பாடல்கள்

ஆடாது அசங்காது வா கண்ணா

கிருஷ்ணரின் மீதான மிக அழகான ஒரு கிருதி.

பால்வடியும் முகம்

பரவச நிலையில் பாடிய ஒரு அற்புதமான பாடல்.