மாரிமுத்தாபிள்ளை

1712 - 1787

தமிழ் மூவர் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவர். தில்லை அம்பலவானரை துதித்து பாடுவதையே தன்னுடைய கடமையாக கொண்டிருந்தார்.

வாழ்க்கை குறிப்பு
இவர் 1712 - 1787 இந்த காலத்தவர். சிதம்பரத்துக்கு அருகில் உள்ள தில்லைவிடங்கன் என்ற ஊரில் பிறந்தார். இளமையிலேயே பாட்டுகள் எழுதும் ஆற்றல் பெற்றவர்... சிவகங்காதர தேசிகர் என்பவரிடம் தமிழ்கல்வியும் சமய கல்வியும் பயின்றிருக்கிறார்... அருணாச்சல கவிராயாரிடம் இவரும் பழகி இருக்கிறார்... அவரிடமும் இசைத்திறனையும் அறிவையும் வளர்த்து கொண்டிருக்கிறார்.. தில்லை அம்பலவானரை துதித்து பாடுவதையே தன்னுடைய கடமையாக கொண்டிருக்கிறார்... நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளார் என்று தெரிகிறது.. இவருடைய பாடல்களும் பல்லவி அனுபல்லவி சரணம் என்ற பகுதிகள் அடங்கிய பிரதிகளாகத்தான் இருக்கிறது.... முதலில் கீர்த்தனங்கள் என்று பெயரில் வழங்கப்பட்ட பாடல்களுக்கு பிறகு இந்த தமிழ் மூவர் காலத்தில்தான் பல்லவி அனுபல்லவி சரணம் என்ற படிமம் வந்தது என்று சொல்கிறார்கள். ஒருமுறை இவருடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாத போது நடராஜ பெருமாளிடம் மனமுருகி வேண்டி இருக்கிறார்.. ஒருநாள் இறைவன் இவருடைய கனவில் தோன்றி ஒரு சைவபெரியவர் உருவில் தோன்றி இந்த ஊரைப் பற்றி ஒரு பிரிபந்தம் இயற்று உன் கவலையெலாம் நீங்கும் என்று சொன்னதாக தெரிகிறது. இவர் பிறகு கோவிலுக்கு சென்று ஈஸ்வரனை பற்றி நிறைய பாடல்களை இயற்றி ஒரு நூலை பாடி முடித்திருக்கிறார். இந்த நூலுக்கு புலியூர் வெண்பா என்று பெயர்... சிதம்பரத்திற்கு புலியூர் என்ற பெயரில் உண்டு... இந்த பாடல்களை எல்லாம் பாடிய பிறகு அவர் மகனின் உடல்நிலையும் சரியாகி விட்டது.. இவர் நடராஜருக்காக ஐம்பது பாடல்களுக்கு மேல் இயற்றி இருக்கிறார். மற்றும் சிதம்பரேஸ்வரர், விரலி விடு தூது, புலியூர் சிங்கரவேலர் பதிகம் இன்னும் பல பதிகங்களையும் இலக்கியங்களையும் இயற்றியுள்ளார். இவருடைய ஐம்பது பாடல்களில் இருபத்தைந்து பாடல்கள் தான் தற்பொழுது கிடைத்திருக்கிறது என்று கூறுவார்கள்... இவருடைய பாடல்கள் பொருட்செய்யுள் உள்ள பாடல்களாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் முத்திரை வைத்துள்ளார்கள் அல்லவா .அதேபோல் இவர் மாரிமுத்தாபிள்ளை சிம்பரத்தின் பல்வேறு பெயர்களை பாடலில் முத்திரையாக பயன்படுத்தியுள்ளார்... அதாவது தில்லை ,புலியூர்,பூலோக கைலாசம் ,தென் கைலாயம் ,பொன்னம்பலம் இது மாதிரியான வார்த்தைகளை முத்திரையாக இவர் பயன்படுத்தி இருக்கிறார்....
பிரபலமான பாடல்கள்

காளித்தூக்கி நின்றாடும் தெய்வமே

இவருடைய பாடல்களில் பிரசித்தமாக இருப்பது. இதில் நாட்டிய செய்யுளும் ஆட்படுகிறது...

ஒரு கால் சிவ சிதம்பரம்

ஆரபி ராகத்தில் இருக்கும் பாடல்.