கோபால கிருஷ்ண பாரதியார்

1811 - 1896

தமிழிசையையும் ஆன்மிகத்தையும் வளர்த்த வாக்கைக்காரர். நந்தனார் சரித்திர கீர்த்தனைகளை இயற்றியதன் மூலம் அழியாப் புகழ்பெற்றவர்.

வாழ்க்கை குறிப்பு
1811 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகில் உள்ள நரிமணம் என்ற ஊரில் பிறந்தார். இசை குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையிலேயே இவருக்கு இசையில் ஆர்வமும், ஞானமும் இருந்தது. கணம் கிருஷ்ணையரிடம் கர்நாடக இசையும், மராட்டிய மண்ணனின் அரசவையில் வித்வானாக இருந்த ராமதாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசையும் கற்றார். முப்பதாவது வயதில் மாயவரம் சென்று கோவிந்தயதி என்பவரிடம் வடமொழியும் வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்களும் கற்றார். திருமண வாழ்வில் நாட்டமில்லாமல் தன் வாழ்நாளை துறவி போல வாழ்ந்தார். பக்தி சுவை கொண்ட பாடல்களை பாடி வீதிகளில் செல்வார். இவருடைய பாடல்கள் கேட்ட பலர் இவருடைய சிஷ்யர்களாக உருவாகினார்கள். நந்தனார் சரித்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்திருக்கிறார். காரைக்காலில் கலெக்டராக இருந்த சிசியார்துரை என்பவர் இதை கேள்விப்பட்டு, இதை புத்தகமாக வெளியிட உதவி செஞ்சிருக்காரு. இதுவே இவருடைய கீர்த்தனைகளின் முதல் அச்சு பிரதி. நந்தனார் சரித்திரத்தை அடுத்து, இவர் நீலகண்டநாயனார், இயற்பை நாயனார், காரைக்கால் அம்மையார் சரித்திரம் ஆகியவைகளையும் பாடியுள்ளார். இவருடைய பாடல்கள் இசை மேன்மையும் பக்தி நிறைந்ததாகவும் இருக்கிறது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர்.
பிரபலமான பாடல்கள்

சபாபதிக்கு வேறு தெய்வம்

ஆபகி ராகத்தில் அமைந்த மிகப்பிரபலமான கீர்த்தனை.

எப்போ வருவாரோ

மனமுருகி பாடிய பக்திப் பாடல்.