வாழ்க்கை குறிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தில்லையாடி என்ற ஊரில் நல்லதம்பிபிள்ளை மற்றும் வள்ளியம்மாள் தம்பதியர்க்கு 1712 ல்
பிறந்திருக்கிறார். இவருக்கு மூன்று அண்ணன்மார்கள் உண்டு. ஐந்து வயதிலேயே தமிழ் பள்ளியில் சேர்க்கப்பட்டு
பயின்று வந்திருக்கிறார்... பன்னிரண்டு வயதிற்குள் அந்த பள்ளியில் கற்றுத்தந்த அனைத்தையம் கற்று
முடித்தார்..
இவருடைய இளம் வயதிலேயே இவருடைய பெற்றோர்கள் காலமாகி விட்டார்கள்... அண்ணனுடைய பராமரிப்பில் இருப்பதை
விரும்பாத இவர் தர்மபுரத்தில் சைவ மடம் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. அந்த சைவ மடத்தில் போய் தங்கி
விட்டார்... அங்கு தங்கி பல தமிழ் இலக்கியங்கள் இலக்கணங்கள் சமயநூல்கள் அனைத்தையும் கற்று தேர்ந்தார்.
பிறகு சொந்த ஊர்திரும்பி நகை கடை ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். கடைக்கு சில தங்கம் வாங்கலாம் என்று
முடிவெடுத்து பாண்டிச்சேரி செல்லலாம் என்று முடிவெடுத்து ஒரு முறை சென்றார். பாண்டிச்சேரி செல்லும் வழியில்
சீர்காழி வழியே செல்லும் போது தர்மபுரி மடத்தின் கிளை ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறார். அந்த மடத்தின்
தலைவராக இருந்தவர் சிதம்பரம்பிள்ளை இவருடைய நண்பர் தான் அவர். உடனே அவரை பார்த்து பேசும் பொழுது இவரை அவர்
மடத்திலேயே தங்கும்படி கேட்டுக்கொண்டார்...
அருணாச்சல கவிராயரும் தன் குடும்பத்தோடு அந்த சீர்காழி மடத்திலேயே தங்கிவிட்டார்.... பிறகுதான் இவர்
சீர்காழி அருணாச்சலகவி என்று அறியப்பட்டார்.... தமிழ் பயின்று சீர்காழி தலபுராணம் ,சீர்காழி கோவை, அனுமார்
பிள்ளைதமிழ் ஆகிய நூல்களை இயற்றி இருக்கிறார்.
அப்பொழுது வெங்கடராமன் கொதண்டராமன் என்னும் இரண்டு இசை வல்லுனர்களுடைய நட்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
இவ்விரு இசை வல்லுனர்கள் தமிழ்புலமை கற்பதற்காக அருணாச்சல கவிராயரிடம் சீடர்களாக சேர்ந்துவிட்டனர்.
அருணாச்சல கவிராயர் இராமாயணத்தை நாடக வடிவில் பல கீர்த்தனைகளை இயற்றினார்... அருணாச்சல கவியின் இராமநாடகம்
என்பது பிரசித்திபெற்றது...
பிறகு தனது இராமநாடகத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என எண்ணுகிறார். அங்கு சென்று கோவில்
அதிகாரிகளை கேட்கும் போது அதிகாரிகள் மறுத்துவிட்டனர். உடனே மனம் வருந்தி அந்த அந்த ரங்கநாதரை துதித்து "ஏன்
பள்ளி கொண்டீர் ஐயா...." என பாடத்தொடங்கினார். இரவு இறைவன் கனவில் வந்து கம்பரை போல் நீயும் நூலை
அரங்கேற்றம் செய்யலாம் இங்கே அரங்கேற்றம் செய் என்று கூறி மறைந்து விடுகிறார்...
அருணாச்சல கவிராயர் இராம நாடகத்தை அரங்கேற்றும்போது இவருக்கு 60 வயது... இவரை தனது 67 வது வயதில் இறைவனடி
சேர்ந்தார்..